எல்லாருக்கும் வணக்கம்,
என்னோட very first Blog-ன் feedback-அ கேட்டதுக்கு அப்புறம் இந்த Blog-ல அதற்குரிய மாற்றங்கள செஞ்சுருக்கேன்.பெரும்பான்மையோரால் இரு முக்கிய தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டன. முதல் தவறு ,அந்த Blog- அ எழுதுறதுக்கு எங்கிட்ட இருந்த பொறுமைய, நான் அத படிக்கிறவங்க கிட்டயும் எதிர்பாத்தது. இரண்டாவது தவறு நானே சொந்தமா எழுதாம விவேகானந்தர் சொன்னத எழுதுனது. பாசக்கார பயலுவ (விவேகானந்தர் சொன்னத கூட படிக்க மாட்டேன்)நான் சொந்தமா எழுதுனாதான் படிப்பேன்னு அடம் புடிக்கிறாங்க. ஒரே ஒரு Blog-எழுதுனதுக்கே இவ்வளவு வரவேற்ப்பா!!!!. :-) அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்.... எனது Blog-ல் எதாகிலும் பயனுள்ள விஷயங்களை எதிர்பார்க்கும் நல்லவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!!!! இது முழுக்க முழுக்க வெட்டி Blog-ஏ அன்றி வேறில்லை. :-). என் இனிய நண்பர்களே!!! இதோ தனது சொந்த கருத்துக்களுடன் உங்கள் சந்திரசேகரன் தனது இரண்டாவது Blog-ஐ உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன் . :-)
ஒட்டு மொத்த உலகமும் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருந்த கால கட்டத்தில், அற வழிப் போராட்டத்தின் அவசியத்தை அகிலத்திற்கு உணர்த்திய அண்ணலின் தேசம், தற்போது நடைபெற்ற olympic போட்டிகளில் மூன்று விளையாட்டுக்களில் பதக்கங்கள் வென்றிருக்கிறது - துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம் மற்றும் குத்துச் சண்டை!!!!! இதில் அபினவ் பிந்த்ரா -வின் தங்கம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் சீனத் தலைநகரில் நமது தேசிய கீதத்துடன் இந்திய தேசியக் கொடியை ஏற்றுவதற்கு இதை விட ஒரு நல்ல சந்தர்ப்பம் வாய்க்குமென்று தோன்றவில்லை!!!
வியத்தகு சாதனை புரிந்த பின்னரும் அந்தப் பதக்கம் அணிவிக்கும் நிகழ்ச்சியில் அபினவிடம் காணப்பட்ட அமைதி, ஏதோ பத்து நிமிடம் முன்னர் பார்த்தசாரதியிடம் பகவத்கீதை பயின்றவனைப் போல் இருந்தது. ஆயிரத்தில் ஒருவன்/ஒருத்தி என்று கூறிக்கொள்பவர்களே ஆட்டம் காட்டும் இந்தக் காலத்தில் நூறு கோடியில் ஒருவனாகத் தங்கம் வென்றவனிடம் காணப்பட்ட அமைதி எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதே போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீனனின் ஆர்ப்பாட்டமான அழுகையோ, ஏதோ சீனாவிற்குக் கிடைக்கவிருந்த ஒரே ஒரு தங்கப்பதக்கத்தையும் அவன் இந்தப் போட்டியில் நழுவ விட்டது போல் தோற்றமளித்தது!! அதே சமயம் அபினவின் அமைதியோ, இந்தியாவிற்குக் கிடைக்க கூடிய பல தங்கப் பதக்கங்களில் இதுவும் ஒன்று என்பது போல் இருந்தது!!. :-) Olympic 2008-ல் சாதித்த அனைத்து இந்தியர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.....
இந்தியா olympic-ல் பெரிய அளவில் சாதிக்கத் தவறிய போதெல்லாம் நாம் ஒரு புலம்பலைக் கேட்கத் தவறுவதில்லை. அது இந்திய மக்கள் cricket மோகத்தில் ஏனைய விளையாட்டுக்களை ஆதரிப்பதில்லை என்பதே. Cricket இந்தியாவில் பிரபலமானதற்க்குப் பல காரணங்கள் சொல்லப் படுகின்றன. என்னைப் பொறுத்த வரை இரு முக்கியமான காரணங்களை முன் வைக்க விரும்புகிறேன். ஒன்று கிரிக்கெட் இந்து மதத்தைப் போன்றது!!!. ஆம், எத்தனை வடிவங்களில் வேண்டுமானாலும் அந்த விளையாட்டை விளையாட இயலும். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பாடம் நடத்தி bore-அடித்த காலங்களில் Book Cricket விளையாடிய அனுபவம் அனேகமாக அனைவருக்கும் இருந்திருக்க கூடும். மற்ற விளையாட்டுக்களை இது போன்று விளையாட இயலுமா என்பது ????????. இரண்டாவதாக, Cricket-ன் விதிமுறைகள் இந்திய அரசியல் சட்டத்தைப் போன்றது!!! எப்படி வேண்டுமானாலும் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு விதிமுறைகளை வளைத்துக் கொள்ளலாம். எனக்குத் தெரிந்த வரையில் நடுவரே விளையாட்டு வீரராகவும் பங்குபெறும் வாய்ப்பு உடைய மிக மிகச் சில (சிறுவர்கள் விளையாடும்) விளையாட்டுகளில் Cricket-ம் ஒன்று. இத்தகைய காரணங்களாலும் Cricket சிறுவர்கள் மத்தியில் பிரபலமடைவது தவிர்க்க இயலாத ஒன்று.
இனி இந்தியா சீனர்களுக்குச் சவால் விடும் வகையில் Olympic-ல் ஜொலிக்க வேண்டுமானால் நாம் இந்தியாவின் ஐந்து முக்கிய மாநிலங்களில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அவை Maharashtra, Punjab, W.Bengal, Kerala மற்றும் Tamilnadu. ஏனெனில் சற்றே வரலாற்றைத் திரும்பிப் பார்த்தோமானால், நேதாஜி-யின் இந்திய தேசிய இராணுவத்தில் இந்த மாநிலத்தவர்களின் மகத்தான பணிகள் நம் நினைவிற்கு வரத் தவறுவதில்லை. இந்த மாநிலத்தவர்களது சக்திகள் சரியான விதத்தில் ஒருங்கிணைக்கப் படவேண்டும்.
முக்கியமாக தமிழகத்தைப் பொறுத்த வரை இது ஒரு Double Standard State. (ஆதலால்தான் Double Standard உடைய திராவிடக் கட்சிகள் மட்டுமே இங்கு கொலோச்சுகின்றனவோ!!!). ஏனெனில் சுதந்திரத்திற்கு முன்னர் தமிழக்கத்தின் ஒரு பகுதியைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக காந்தீயத்தை ஆதரித்த போதிலும், மற்றொரு பகுதியைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக தீவிரவாதத்தை ஆதரித்தனர். அவ்வளவு ஏன், Subhash Chandra Bose, Hitler-இடம் சென்று உதவி கேட்டார் என்ற ஒரே காரணத்திற்காக Hitler-ஐ Hero-வாகவும்!!! மகாத்மா காந்தியை வில்லனாகவும் சித்தரிக்கக் கூடிய மக்கள் இன்றும் தமிழகத்தின் தென் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மிக எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் அந்தப் பகுதிகளில் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். பாவம் அந்த மக்களது முழு சக்தியும் சாதிச் சண்டைகளிலும், அரசியல் சாக்கடையிலும் வீணாகிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் இத்தகைய மக்களின் சக்திகள் சரியான விதத்தில் ஒருங்கிணைக்கப் பட்டால் நாம் சாதனைச் சிகரத்தைத் எட்டுவோம் என்பதில் எனக்கு அபாரமான நம்பிக்கை உள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் ஏற்ப்பட்ட உணவுத் தட்டுப்பாட்டிற்கு அமெரிக்க அதிபர் கூறிய விநோதக் காரணம் - இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினர் தரமான உணவு வகைகளை நாட ஆரம்பித்து விட்டனர் என்பதே. ஐரோப்பியக் காடுகளில் மிருகங்களோடு மிருகங்களாக அந்த மக்கள் வாழ்ந்த காலத்திலேயே இந்தியாவில் விவசாயம் நடை பெற்றது என்பது பாவம் அந்த புத்திசாலி!!! அதிபருக்குத் தெரிய வாய்ப்பில்லை. யார் கண்டது இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு மேலும் ஒரு அமெரிக்க அதிபர் புலம்பக் கூடும் - இந்திய நடுத்தர வர்க்கத்தினர் மிகத் திறமையாக விளையாடிய காரணத்தால் தங்களால் பதக்கங்களை வெல்ல இயலவில்லை என்று!!!!. அந்தத் தங்க வேட்டை நடைபெறும் நாள் வெகு தொலைவில் இல்லை. Beleive in Indian middle class and it's power.
நம்பிக்கையுடன்
Chandru.
Sunday, October 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
“Believe in India”-nnu blog-a start pannitu “Believe in Indian MIDDLE class”-nnu blog-a end panniteenga!!! Intha so-called “middle class” makkala ippo namba mudiyuma appadingarathu dhan ennoda sandaegam!!!! India-la irukara makkal thohaikku nama vivasayam panni iruntha inniku ulahathula namma than muthalla irunthurupom… illa, vivasayam vaendam… ethavathu R & D, illa production… athu ethuvum pannama… U.S. company-la (ennaiyum saerthuthan) vaelai kidaichu; masam 40 K vanginathum (plus next company-la 30% hike!!!)…ellathayum maranthu status-a “middle class”-la irunthu maathi “Upper class”-nu sollara intha middle class kootatha eppadi nambarathu?????? Olympics-la medal win panna Abhinav.. oru panakkara pulli... Vijendar Kumar-um, Sushil Kumar-um.. adi mattathula irunthu vanthavanga.... middle class makkal-la intha mathiri atkal irunthal, avunga IT company-la saerama irunthal... nichayam namma middle class makkal-a namba mudiyum... (naan sollarathu Tamil Nadu and Kerala-vai saerntha… Bangalore-il kudikondirukum, Bangalore-il vaelai parka kanavu kannum middle class makkal pathi… ;-) )
Post a Comment