ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக் கொண்டால் அவரால் வருங்காலத் தலைமுறையினருக்கும் நீங்காத துன்பம் விளையும். - குறள் 508, அதிகாரம்- தெரிந்து தெளிதல்.
எல்லாருக்கும் வணக்கம்,
சமீபத்துல Internet-ல health problems சம்பந்தமா ஒரு சர்வே படிச்சேன். அதாவது 2010-ல இந்தியாவுல mental health related problems அதிகமா இருக்குமாம். diabeties இரண்டாவது இடத்துக்குப் போய்டும்னு அந்த சர்வே சொல்லுது. இப்ப அடிக்கடி நாட்டுல நடக்குற குண்டுவெடிப்புகளையும், சந்நியாசி!!!-னு தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர்களே வெடிகுண்டு வைத்துப் பொதுமக்களைக் கொல்வதையும், தன் கண் முன்னால் நடக்கும் அடிதடிகளைப் போலீஸ்காரர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதையும், நமது நிதியமைச்சர் இந்தியப் பொருளாதாரத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அடிக்கடி சொல்வதையும், 2011-ல் நான் தான் தமிழக முதலமைச்சர் என்று பலர்!!! அடிக்கடி கூறிவருவதையும் பார்க்கும்பொழுது 2010-குறித்த மேற்ச்சொன்ன ஆய்வுத் தகவல் உண்மையா இருக்குமோன்னு சந்தேகம் வருது. :-) . அது மட்டும் இல்ல, இலங்கைப் பிரச்சனையை மையமாக வைத்து சிலர் பேசுவதைக் கேட்கும்பொழுது தமிழகத்தில் mental health problem அதிகமா இருக்குமோன்னு பயமா இருக்கு........
2001-ம வருஷம் நான் என்னோட friends கூட North India-வுக்கு Industrial Visit!!!!!!!! போனோம். அப்ப அந்த group-ல இருந்த 24 பேர்ல 2 பேருக்கு மட்டுமே Hindi தெரியும். ஆம், எனக்கும் மற்றும் இன்னொருவருக்கும் (அவர் ஒரு இலங்கைத் தமிழர்!!!) மட்டுமே Hindi தெரியும். இருவருக்குமே Hindi கற்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அப்ப நாங்க Simla-வுல ஒரு Bazaar-குப் போயிருந்தோம். அங்க பொருட்கள் வாங்கும்போது ஒவ்வொரு கடையிலும் பேரம் பேசுவதற்கு எங்கள் இருவரில் ஒருவர் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எங்களைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு கடை வியாபாரியும் அவனுடன் சேர்ந்த சிலரும் எங்களைக் கூப்பிட்டு ஒரு statement விட்டாங்க. அதாவது இந்தியனா இருந்தா Hindi தெரிஞ்சிருக்கனுமாம்!!!!!, அப்புறம் Hindu-வா இருக்கனுமாம்!!!!!!. எனது நண்பர்களின் இந்தியத் தன்மையை நிர்ணயிக்க இவன் யார் என்ற (கல்லூரி மாணவனுக்கே உரிய) கோபத்தோடு :-) Bazhaar-ல எதுவுமே வாங்காம திரும்பினோம். அந்த statement ஏதோ ஒரு பெரும்பான்மை சமூகத்தின் கண்ணோட்டமாகவே எனக்குத் தோன்றுகிறது.....
அகத்திய முனிவர பத்தி புராணத்துல ஒரு கதை உண்டு. சிவபெருமான் இமய மலையில் இருந்த அகத்தியர கூப்பிட்டு தெற்கில் போய் வசிக்கும்படி சொன்னதாகவும், அப்பத்தான் வடக்கிற்கும், தெற்கிற்கும் ஒரு சமநிலை ஏற்படும்னும், அதனால அகத்தியர் தெற்குப் பக்கம் வந்து வடமொழிக்கு இணையான தமிழையும், கங்கைக்கு இணையான காவிரியையும் தோற்றுவித்ததாக ஒரு கதை உண்டு. சாதாரணமாகப் பார்க்கும்பொழுது இது ஒரு கதையாகத் தோன்றினாலும், இந்தியாவின் வடக்கிற்கும், தெற்கிற்கும் ஒரு சமநிலை தமிழால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது. அதனால்தான் இனம், மொழி மற்றும் பழக்க வழக்கங்களில் முற்றிலும் வேறுபட்டு அமைந்திருக்கிறோம். இந்தியச் சமநிலைக்கு ஒரு வகையில் தமிழும் உதவியிருக்கிறது என்பது அந்தப் பெரும்பான்மைச் சமூகத்திற்கு தெரிய வாய்ப்பில்லை.
தமிழின் வலிமை அந்தச் சமூகத்திற்குத் தெரியாத போதும், மத்திய அரசுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. அது தெரிந்த காரணத்தினாலே மத்திய அரசு இலங்கைப் பிரச்சனையில் திரிசங்கு நிலையைக் கடைப்பிடித்து வருகிறது. தமிழின் பெயரால் தமிழகத்தில் எத்துணை மோசமானவரையும் நல்லவராகச் சித்தரிக்க முடியும் என்பதற்கு பிரபாகரனும், வீரப்பனும் சிறு உதாரணங்கள். இதனால் தானோ என்னவோ பக்கத்து வீட்டு மருமகளின் தனிக்குடித்தனத்திற்கு support பண்ணினால் எங்கே தன் வீட்டு மருமகளும் தனிக்குடித்தனம் போய் விடுவாளோ என்ற மத்திய அரசின் பயம் நன்றாகவே புலப்படுகிறது. சில மாநிலத் தலைவர்கள் மற்றும் சினிமாத் துறையினரின் அர்த்தமில்லாத பேச்சுகள் இந்த பயத்தை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்தது மிகவும் துரதிர்ஷ்ட வசமானது. தனித் தமிழ் ஈழத்தை ஆதரிக்கும் பேச்சுக்களை தமிழகத் தலைவர்கள் கைவிடாத வரையில், நம்பக்கூடாத சிங்கள அரசை நம்ப வேண்டிய கட்டாயத்திற்கு ஆளான மத்திய அரசுக்கு, இலங்கைப் பிரச்சனை தீராத துன்பத்தையே தரும்.....
Sunday, November 23, 2008
Subscribe to:
Posts (Atom)